×

டெல்லியில் தொடர்ந்து 3ம் நாளாக ‘கடுமை’ பிரிவில் நீடிக்கிறது காற்றின் தரம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் புகைமூட்டம் சூழ்ந்து காற்றுமாசுவின் அளவு  தொடர்ந்து மூன்றாம் நாளாக “கடுமை” பிரிவில் நீடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தீபாவளி தினத்தன்று தடையை மீறி,  பட்டாசுகளை  மக்கள் வெடித்தனர். அதோடு பயிர்கழிவுகள் எரிப்பால் சேர்ந்த மாசு இரண்டற  கலந்து, காற்றின் தரத்தை கடுமை பிரிவுக்கு இட்டுச்சென்றனது.மத்திய மாசு  கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ள புள்ளிவிவரப்படி, நகரின்  மாசு அளவு நேற்று முன்தினம் 415 என்கிற நிலையில் இருந்தது. இது  சற்று குறைந்து நேற்று காற்றுமாசு 408 என்கிற அளவில் நீடித்தது. எனினும்,  400க்கும் மேற்ப்பட்ட புள்ளிகள் பதிவாகும் பட்சத்தில் இது கடுமை பிரிவில்  குறிக்கப்படும். காற்றின் தரத்தை அதில் கலந்துள்ள மாசுவுக்கு எற்ப  பல்வேறு அளவீடுகளில் வகைப்படுத்தப்பட்டு–்ள்ளது. அதன்படி, 0-50 வரை நல்ல  தரம், 51-100 என்றால் திருப்தி, 101-200 வரை பரவாயில்லை ரகம், 201-301  என்பது மோசம், 301-400 மிகவும் மோசம், 500க்கும் அதிகமாக இருந்தால் அபாய  கட்டம் எனவும் குறிக்கப்படுகிறது.நேற்று நகரில்  மொத்தமுள்ள 37 காற்றுதர ஆய்வு மையங்களில் 22 மையத்தில் காற்றின் தரம் கடுமை  என்கிற பிரிவில் பதிவானது.

தலைநகரில் காற்றுமாசுவின் அதிகபட்ச அளவாக  ஆனந்த் விஹாரில் 466 என பதிவாகனது. அதற்கு அடுதத இடத்தில்  வஜீர்பூர் 453  ஆக பதிவானது. இதுபோன்ற  நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் முச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற  சுவாசகோளாறுகளை ஏற்படுத்தி விடும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கு முக  கவசங்களை அரசே நாளை முதல் விநியோகம் செய்யும் என்று முதல்வர் கெஜ்ரிவால்  நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.அதோடு, முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு முக கவசம் அணிவித்து  பள்ளிக்கு அனுப்புமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,  பள்ளிகள் அளவில் நடத்தப்படும் உள்ளூர் மற்றும் வெளிப்புற விளையாட்டு  போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் அரசு உத்தரவிட்டது. மேலும், நகரில் அதிகபட்ச காற்றுமாசு உள்ள வஜீர்பூர், ஆனந்த் விஹார், அசோக் விஹார், விவேக் விஹார் மற்றும் பவானா ஆகியவை 5 இடங்களை கண்டறிந்து அங்கு உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சிகள் மற்றும் டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டது.

மாநகராட்சிகள் தீவிரம்
மாசு விதிகளை மீறியதற்காக 164 அபராத ரசீதுகளை தெற்கு மாநகராட்சி வழங்கியுள்ளது. நான்கு மண்டலங்களிலும் மாசு அதிகமுள்ள பகுதிகள் என 202 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இரவுநேர ரோந்துபணி தீவிரமாகி உள்ளது. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதேபோன்று வடக்கு மாநகராட்சியும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பது,  கட்டுமான இடிப்புக் கழிவுகளை கொட்டுவது மற்றும் பிற மீறல்களில் ஈடுபட்டதாக  5.65 லட்சம் அபராதம் வசூலிப்பட்டுள்ளது. தவிர, 104 வார்டுகளில் ஒவ்வொன்றிலும் தண்ணீர் தெளித்தல் தொடர்கிறது.


Tags : Delhi , Continued , Delhi,telephone,air lasts
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...